சமயங்களுக்கு இடையிலான பிரச்னைகள் மீது அமைச்சர் சொன்னதை அவரது உதவியாளர் தற்காக்கிறார்

kurupசமயங்களுக்கு இடையிலான மன்றம் ஒன்றுடன் பிரதமர் துறை அமைச்சர் ஜோசப்  குருப் நடத்திய சந்திப்பு தொடர்பில் மலேசியாகினி வாசகர்கள் எழுப்பிய பல  விஷயங்கள் அமைச்சருடைய அதிகாரத்துக்கு அப்பாற்பட்டவை என அவரது  பத்திரிக்கைச் செயலாளர் சாலேகி அமாட் ஜனுரி கூறுகிறார்.

‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் இப்போது  நீதிமன்றத்தில் இருப்பதால் அவை குறித்து ‘மேலும் கேள்விகளை எழுப்பக்  கூடாது’ என்றார் அவர்.

“நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கும் வரையில் அது பற்றி எந்த ஊகங்களையும்  வெளியிட வேண்டாம் என நான் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்,” என  அவர் விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.

இஸ்லாம் தவிர்த்த மற்ற சமயங்கள் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும்  விஷயங்கள் உள்துறை அமைச்சின் பார்வையின் வருவதாகவும் இஸ்லாமிய  விவகாரங்கள் பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கிர் பாஹாரோம் கீழ் வருவதாகவும்  அவர் சொன்னார்.