டிஏபி: கட்சிப் பேரவையில் கலந்து கொள்ளாதவர்கள் பற்றி நஜிப் பொய் சொல்கிறார்

najibகடந்த ஆண்டு இறுதியில் நிகழ்ந்த டிஏபி பேரவை குறித்து 753 பேராளர்களுக்கு  கட்சி தகவல் கொடுக்கவில்லை எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்லிக்  கொள்வது ஒரு பொய் என அந்தக் கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர்  அந்தோனி லோக் அவரைச் சாடியுள்ளார்.

அந்த எண்ணிக்கையில் சொந்தக் காரணங்களுக்காக பேரவையில் கலந்து  கொள்ளாத பேராளர்களும் அடங்குவதாக அவர் விளக்கினார்.

16வது டிஏபி தேசியப் பேரவையில் கலந்து கொள்ளுமாறு 753 பேராளர்களுக்குத்  தெரிவிக்காததால் ஜனநாயகத்தை பின்பற்றும் துணிச்சல் அந்தக் கட்சிக்கு இல்லை  என்பதால் அது ‘மகத்தான கட்சி’ என நஜிப் குற்றம் சாட்டியதாக ஆகஸ்ட் 16ம்  தேதி உத்துசான் மலேசியாவில் வெளியான செய்தி பற்றி லோக் குறிப்பிட்டார்.najib1

கட்சிப் பேரவையில் கலந்து கொள்ளாத பேராளர்கள் கையெழுத்திட்ட 500  கடிதங்களையும் லோக் இன்று நிருபர்களிடம் காட்டினார். தங்களுக்கு பேரவையில்  கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கும் அறிவிப்பு கிடைத்தது என்றும் சொந்தக்  காரணங்களுக்காக அதில் பங்கு கொள்ள முடியவில்லை என்றும் அந்தப்  பேராளர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறு தேர்தலை நடத்த வேண்டும் என
உத்தரவிட்ட ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அதற்கான காரணத்தைக்  கூறாததால் நஜிப்பின் அறிக்கை ஆர்ஒஎஸ் பயன்படுத்திய காரணமாக இருக்க  வேண்டும் என லோக் சந்தேகிக்கிறார்.