13வது பொதுத் தேர்தல் முடிந்து 100 நாட்களாகியும் தேசிய சமரசத்தை ஏற்படுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெளிவான கடப்பாடு எதனையும் தெரிவிக்கவில்லை என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் சொல்கிறார்.
“தேசிய சமரசத்திற்கு அவர் ஏதும் சொல்வதாகத் தெரியவில்லை. மாறாக அரசியலில் நெருப்புக்கு வீசிக் கொண்டிருக்கிறார்,” என அவர் இன்று கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
பிரஜைகளுக்குப் பயனளிக்காத ‘வெள்ளை யானை’ திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதால் நஜிப்பின் அடைவு நிலை ‘மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது’ என்றும் மாஹ்புஸ் சொன்னார்.
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும் குற்றச் செயல்கள் கூடி விட்டதாலும் மக்களுடைய சுமை அதிகரித்து விட்டது என பொக்கோக் செனா எம்பி-யுமான அவர் தெரிவித்தார்.
பொருட்களின் விலைகள் வானளவுக்கு அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அவை மக்களுடைய பணப் பைகளை பாதிக்கின்றன என்றும் அவர் சொன்னார்.