‘பாதிரியார் பொய்கள்’ தொடர்பில் டிஏபி உத்துசான் மீது வழக்குப் போடும்

lim‘கற்பனையான’ தந்தை அகஸ்டஸ் சென் எழுதிய கையேடு ஒன்றில் காணப்படும் ‘அவதூறான பொய்களுக்காக’ டிஏபி அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான்  மலேசியா நாளேடு மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தனது  வழக்குரைஞர்களுக்கு ஆணையிட்டுள்ளது.

டிஏபி தொடர்ந்து மறுத்த போதிலும் ‘பொய்களை மறுசுழற்சி செய்வது’ என அந்த  நாளேடு முடிவு செய்துள்ளதால் வழக்குப் போட டிஏபி எண்ணியுள்ளதாக அந்தக்  கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.lim1

அந்த கையேட்டுக்காக அதன் ஆசிரியர் ‘பல வகையான அவதூறு வழக்குகளுக்கு’  தயாராக இருப்பதோடு கிரிமினல் நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

சென் வெளியில் வர வேண்டும் என லிம் துணிச்சலாக அறிக்கை விடுத்த ஒரு வாரத்திற்குப் பின்பு அந்த நாளேட்டின் ஞாயிறு பதிப்பான மிங்குவான்  மலேசியாவில் அண்மைய கட்டுரை  ளியிடப்பட்டுள்ளது என்பதையும் லிம்  சுட்டிக் காட்டினார்.