நஜிப் டாக்டர் மகாதீருக்கு பதில் அளிக்கிறார் சமநிலை பேணப்படும் என வாக்குறுதி

najibதனிநபர் மனித உரிமைகளுக்கும் குற்றச் செயல்களைக் குறைக்கும் பொது  நலனுக்கும் இடையில் சமநிலையை நிலை நிறுத்தப் போவதாக பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளார்.

தடுப்புக் காவல் சட்டங்கள் அகற்றப்பட்டது தொடர்பில் கருத்துரைத்த முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது “சிவில் சுதந்திரத்தின் விலை அதிகமான  துப்பாக்கிச் சூடுகள்” என கூறியுள்ளதற்குப் பதில் அளித்த போது நஜிப் அவ்வாறு  சொன்னார்.

“பொது ஒழுங்கையும் பொது நலனையும் பாதுகாக்கும் போது தனிநபர் மனித  உரிமைகளுக்குக் காயம் ஏற்படாமல் இருப்பதற்காக அரசாங்கம் அந்த  விவகாரத்தை ஆய்வு செய்து வருகின்றது.”

“சமநிலை இருக்க வேண்டும்,” என்றும் நஜிப் வலியுறுத்தினார்.

தடுப்புக் காவல் சட்டங்களை அரசாங்கம் மீண்டும் கொண்டு வருமா என்ற  கேள்விக்குப் பதில் அளித்த பிரதமர், “இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை,”  என்றார்.

“நடப்புச் சட்டங்கள் போதுமானவையா என்பதையும் நாங்கள் ஆராய்கிறோம்.  இப்போது மிகத் தீவிரமாக விவாதங்கள் நடைபெறுகின்றன.”