கைரி நஸ்ரியைக் குறை கூறுகின்றவர்களைச் சாடுகிறார்

nedimதமது புதல்வரை தமது சிறப்பு அதிகாரியை நியமித்த சுற்றுப்பயண, பண்பாட்டு  அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸை குறை கூறுகின்றவர்கள் முதலில் தங்களைப்  பார்த்துக் கொள்ள வேண்டும் என இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி  ஜமாலுதின் வலியுறுத்தியுள்ளார்.

ஏனெனில் நஸ்ரியின் வாக்கு வன்மைக்கு குறிப்பாக நாடாளுமன்றத்தில்
அவருடைய சொல் வன்மைக்கு நஸ்ரியைக் குறை சொல்கின்றவர்கள் ஈடாக  முடியாது என அவர் சொன்னார்.nedim1

“நஸ்ரிக்குச் சவால் விடுகின்றவர்கள் நாடாளுமன்றத்தில் அவர் செய்ததை முதலில்  செய்ய முயல வேண்டும். அவர் தனிமனிதராக எதிர்க்கட்சிகளுடன் வாக்குவாதம்  நடத்தியுள்ளார். உங்களால் அதனைச் செய்ய முடியும் என நீங்கள்  நினைக்கின்றீர்களா ?” என கைரி டிவிட்டரில் வினவினார்.

நஸ்ரியிடம் குறை காண்கின்றவர்கள் “ukur baju dekat badan (sendiri)” என்னும்  மலாய் பழமொழியையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவர் தன்னுடைய  ஆற்றலை அறிந்திருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.

நஸ்ரி தமது புதல்வரான முகமட் நெடிமை சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளது  மீது நிர்வாகத்துக்கு ஆதரவான தரப்புக்கள் குறை கூறியதைத் தொடர்ந்து  கைரியின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.