சாபாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக மிகப் பெரிய நடவடிக்கை

1 sabahசாபாவில், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை ஒன்று விரைவில் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மூசா அமான் இன்று தெரிவித்தார்.

அதில், இராணுவம், போலீஸ், குடிநுழைவுத் துறை மலேசிய கடலோரச் சட்ட செயலாக்கத் துறை, ரேலா, தேசியப் பதிவுத் துறை, சிவில் தற்காப்புத் துறை ஆகியவை பங்கேற்கும்.

சாபா சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலைவரை, குடிநுழைவுத் துறை 252 நடவடிக்கைகளை மேற்கொண்டு 4,350 பேரைச் சோதனை செய்து 2,022 பேரை மேல்விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளது என்றும் அவர் சொன்னார்.