சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட விதம் குறித்து கேள்வி எழுப்புகிறார் வேதா

waythaஇண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, பினாங்கில் ஐந்து சந்தேக நபர்களை போலீசார் சுட்டுக் கொன்ற முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அச்சம்பவத்தைக் காண்பிக்கும்  நிழல்படங்களைத் தாம் பார்க்க நேர்ந்ததாகவும் அவற்றைப் பார்க்கையில் போலீசுக்கும் சந்தேக நபர்களுக்குமிடையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படுவதை நம்ப முடியவில்லை என்றும் அவர் சொன்னார்.

“ஒவ்வொரு தடவையும் போலிசார், தற்காப்புக்காக சுட்டோம் என்ற வழக்கமான பதிலையே சொல்வதுபோல் தெரிகிறது. ஆனால், (கொல்லப்பட்டவர்களின்) காயங்கள் துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்டவைபோல் தெரியவில்லை. நிழல் படங்கள் அவர்கள் நேருக்கு நேர்  சுடப்பட்டார்கள் என்பதைத்தான் காண்பிக்கின்றன”, என பிரதமர்துறை துணை அமைச்சருமான வேதமூர்த்தி குறிப்பிட்டார்.