கம்யூனிசக் கிளர்ச்சியின் வரலாற்று அம்சத்தை ‘புதுக் கிராமம்’ திரைப்படம் சித்தரிக்கிறது என்றால் அதனை வெளியிட திரைப்படத் தணிக்கை வாரியம் அனுமதிக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி (ஒய்வு பெற்ற) முகமட் அஸுமி முகமட் சொல்கிறார்.
உண்மையில் நடந்ததை அந்தத் திரைப்படம் துல்லிதமாகக் காட்டா விட்டால் அது இளைய தலைமுறையினருக்குத் தவறான செய்தியைத் தந்து விடும் என அவர் சொன்னதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
‘வரலாறு சம்பந்தப்பட்டுள்ளதால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் உண்மை நிலையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. அவர்கள் சரியான செய்தியைக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மக்களுக்கு உண்மை நிலை தெரியாது.”
முகமட் அசுமி Cybersecurity Malaysia அமைப்பின் தலைவரும் ஆவார்.
புதுக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இளம் கம்யூனிஸ்ட்
கிளர்ச்சிக்காரருக்கும் இடையில் மலரும் காதலை அந்தத் திரைப்படம் மய்யமாகக் கொண்டுள்ளது.