சூராவ்-வை இடிக்கும் ஆணையை பாத்வா மன்றம் ஆதரிக்கிறது

surauகோத்தா திங்கி செடிலியில் Tanjung Sutera ஒய்வுத் தலத்தில் தியானம் செய்வதற்கு  பௌத்த சுற்றுப்பயணிகள் குழு ஒன்று பயன்படுத்திய இடிப்பதற்கு ஜோகூர்  அரசாங்கம் ஆணையிட்டதை தேசிய பாத்வா மன்றம் ஆதரித்துள்ளது.

சூராவ் அல்லது பள்ளிவாசல் தவறாகப் பயன்படுத்தப்படும் போது அல்லது  மாசுபடுத்தப்படும் போது அதனை இடிப்பது தான் விவேகமாகும் என அதன்  தலைவர் அப்துல் சுக்கோர் ஹுசின் சொன்னார்.

“இன்னொரு சம யத்தைச் சேர்ந்த மக்கள் சூராவ்-வைப் பயன்படுத்த ஒய்வுத் தல  உரிமையாளர் அனுமதித்தது தவறாகும். காரணம் அது syirik எனக்  கருதப்படுவதாகும். ஆகவே அந்த சூராவ்-வை ஜோகூர் இஸ்லாமிய மன்றம்  இடிப்பது தான் விவேகமானது,”என்றும் சுக்கோர் தெரிவித்தார்.

அந்த மன்றம் தனது விசாரணையை முடித்த பின்னர் சூராவ் இடிக்கப்பட
வேண்டும் என ஜோகூர் சுல்தான் ஆணையிட்டார்.