தேசிய சேவை பெண் பயிற்சியாளர்கள் அனைவரும் கருத்தரிப்பு சோதனைக்கு உட்பட வேண்டும் என்ற முடிவை மறு ஆய்வு செய்யுமாறு Sisters in Islam (SIS) என அழைக்கப்படும் இன்னொரு மகளிர் அமைப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்தரிப்பு சோதனை ‘பொருத்தமற்ற நடவடிக்கை’ என அது வருணித்தது.
2004ம் ஆண்டு தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் அந்தத் திட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
அவர்களில் ஆறு பேர் மட்டுமே முகாம்களில் பிரசவித்துள்ளனர் என அந்த அமைப்பு விடுத்த அறிக்கை தெரிவித்தது.
அந்த முடிவு 2010ம் ஆண்டு மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு அங்கீகரித்த ‘ஒருவருடைய தனியுரிமையையும் உடல் அளவிலான கௌரவத்தையும் மீறுகிறது,” என்றும் SIS அமைப்பு கருதுகிறது.