‘அல்லாஹ்’ அறிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தும் எனத் தேவாலயம் அஞ்சுகின்றது

herald‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீதான விவகாரம் நீதிமன்ற  முடிவுக்காக காத்திருப்பதால் அது குறித்து கருத்துச் சொல்வதை நிறுத்திக்  கொள்ளுமாறு எல்லாத் தரப்புக்களையும் கத்தோலிக்க தேவாலயம் கேட்டுக்  கொண்டுள்ளது.

அத்தகைய கருத்துக்கள் மலேசியாவில் ‘இனவாத உணர்வுகளைத் தூண்டி சமய  பதற்ற நிலையை உருவாக்குகின்றன’ என கோலாலம்பூர் Archdiocese வேந்தர்  ரெவரண்ட் தந்தை ஜெஸ்டுஸ் பெரேரா கூறினார்.

“நீதி நடைமுறை தனது பாதையில் செல்ல அனுமதிக்குமாறும் நாங்கள் எல்லாத்  தரப்புக்களையும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம். விரும்பத்தகாத  சம்பவங்களைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான  நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்,” என்றார் அவர்.herald1

‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு எதிராக அரசாங்கம் செய்து  கொண்ட முறையீட்டை தள்ளுபடி செய்யுமாறு சமர்பிக்கப்பட்ட விண்ணப்பம்  நாளை முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் வேளையில்  ரெவரண்ட் தந்தை ஜெஸ்டுஸ் பெரேரா அறிக்கை வெளியாகியுள்ளது.

‘அல்லாஹ்’ என்னும் சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்துவதற்கு  உள்துறை அமைச்சு விதித்த தடை சட்ட விரோதமானது என கோலாலம்பூர் உயர்  நீதிமன்றம் 2009 டிசம்பர் 31ம் தேதி தீர்ப்பளித்தது.

அதற்கு எதிராக உள்துறை அமைச்சு முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்து  கொண்டுள்ளது.