மனித உரிமைகளை மதிக்கும் பிரதமருக்கு சுஹாகாம் பாராட்டு

1 agusமலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), அடிப்படை மனித உரிமைகளை மீறும் சட்டங்கள் கொண்டுவரப்பட மாட்டா எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உத்தரவாதம் அளித்திருப்பதை வரவேற்கிறது.

“அது குற்றச்செயல்களைத் தடுக்க விசாரணையின்றித் தடுத்துவைக்க வகை செய்யும் சட்டங்களைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்ற பரிந்துரைகள் குறித்து சுஹாகாம் அளித்துள்ள பின்னூட்டங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது”, என சுஹாகாம் தலைவர் ஹஸ்லி ஆகம் தெரிவித்தார்.