கொலை மிரட்டல் குறித்து ராயர் போலீஸில் புகார்

rayarஸ்ரீ டெலிமா டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர், தமக்கு ஒரு “கொலை மிரட்டல்” விடுக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது என போலீசில் புகார் செய்துள்ளார்.

இன்று காலை  கிரின் லேனில் உள்ள அவரின் வீட்டில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் இருந்த ஒரு பிளாஸ்டிக் பை கண்டெடுக்கப்பட்டதாக அவர் புகாரில் கூறியுள்ளார்.

இதன் தொடர்பில் தாம் எதையும் ஊகிக்க விரும்பவில்லை என்றும் விசாரணையை போலீசிடமே விட்டுவிடுவதாகவும் ராயர் சொன்னார்.

திங்கள்கிழமை, பினாங்கு சுங்கை நிபோங்கில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசாரிடம்  கேள்விமேல் கேள்வி கேட்டு வருபவர் ராயர் என்பது குறிப்பிடத்தக்கது.