குறைசொல்வோரை விளாசுகிறார் ஐஜிபி

1 igpதிங்கள்கிழமை பினாங்கில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தூற்றுவோரை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கடுமையாகச் சாடினார்.

போலீஸ் சுட்டுக்கொல்லும் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுவதை  அவர் மறுத்தார்.

“லாஹாட் டத்துவில் நாட்டைக் காக்கும் பணியில் போலீசார் உயிரை நீத்தபோது அதை நாடகம் என்று எள்ளி நகையாடினர்.

“சுடும் சம்பவங்கள் பரவலாக நடக்கும்போது நாங்கள் சும்மா வேடிக்கை பார்ப்பதாகக் குறைகூறினார்கள்.

“நாங்கள் குற்றவாளிகளைச் சுட்டுக்கொல்லும்போது ஆர்வக்கோளாறு என்கிறார்கள். வன்கொடுமை என்கிறார்கள்.

“குறைகூறுவோர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். எங்களுக்கென்று ஒரு கடமை இருக்கிறது. மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு அதை நிறைவேற்றுவோம்”, என்றவர் வலியுறுத்தினார்.