பூஜியா: ஷாரிஸாட் வரி செலுத்துவோருக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட சுமை

sharizatமகளிர் விவகாரங்கள் மீது பிரதமருக்கான ஆலோசகராக முன்னாள் அமைச்சர்  ஷாரிஸாட் அப்துல் ஜலில் நியமிக்கப்பட்டுள்ளது, வரி செலுத்துவோருடைய  பணத்தைப் பயன்படுத்தி ‘மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்’ என பிகேஆர்  குவாந்தான் எம்பி பூஜியா சாலே வருணித்துள்ளார்.

ஏனெனில் குறிப்பாக மகளிர் விவகாரங்கள் என வரும் போது ஷாரிஸாட் ‘கூடுதல்  மதிப்பு’ எதனையும் கொண்டு வரவில்லை என அவர் சொன்னார்.

“இது சற்று வெளிப்படையாக இருக்கலாம்.மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தி  மறுசுழற்சி செய்யப்பட்ட ஒரு பொருளை வெளியிடுவதில் எந்தப்பயனும் இல்லை  என நான் எண்ணுகிறேன்.”

“அமைச்சராக இருந்த போது அவர் பெண்களுக்கான திட்டங்களை முன்னுக்குக்  கொண்டு செல்லத் தவறி விட்டார். ஆகவே இப்போது மகளிர் விவகாரங்களுக்காக  ஆலோசகராகப் போடுவதால் என்ன பயன் ?” என பூஜியா வினவினார்.