கறுப்புப்பட்டியலில் உள்ள 1.7 மில்லியன் வாகனமோடிகளின் உரிமங்கள் பறிக்கப்படலாம்

1 driverபோக்குவரத்துப் போலீசாரின் கறுப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 1.7 மில்லியன் வாகனமோட்டிகள் போக்குவரத்து அபராதத் தொகையைச் செலுத்தத் தொடர்ந்து மறுத்து வந்தால் அவர்களின் வாகனமோட்டும் உரிமங்கள் பறிக்கப்படலாம்.

இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்த தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட், அந்த 1.7 மில்லியன் வாகனமோட்டிகளை அடையாளம் காணும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்றார்.

“இப்போதைய நிலையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்கள் அவர்களின் உரிமங்களையும் சாலை வரிகளையும் புதுப்பிக்க முடியாது…….ஆனால், அவர்களின் வாகனமோட்டும் உரிமங்களும் பறிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்”, என்றாரவர்.