பிகேஆர்: Ops Cantas பழமையான சட்டத்தை பயன்படுத்தும் ‘பொது உறவு நடவடிக்கை’

policeOps Cantas போலீசாரின் ‘பொது உறவு நடவடிக்கை’ எனத் தோன்றுவதாக  பிகேஆர் வருணித்துள்ளது.

பழமையான ஒரு சட்டத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையில் “விருப்பம்  போல்’ கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என பிகேஆர் உதவித் தலைவர் என்  சுரேந்திரன் நிருபர்களிடம் கூறினார்.

“நான் பொது மக்களுடைய பாதுகாப்பு பற்றிக் கவலைப்படுகிறேன். குற்றங்களை  ஒடுக்குவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக  போலீசார் மேற்கொண்ட முயற்சியே இதுவாகும்.”

“அவர்கள் பொது உறவு நடவடிக்கையில் ஈடுபட முயற்சி செய்தால் உண்மையான  குற்றவாளிகள் பிடிபட மாட்டார்கள்,” என சுரேந்திரன் சொன்னார்.

1959ம் ஆண்டுக்கான குற்றத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி அதிகாரிகள்  விருப்பம் போல் கைது செய்யப்பட்ட நபர்களை 70 நாட்களுக்கு குற்றச்சாட்டு  சுமத்தப்படாமல் தடுத்து வைத்து ‘தண்டிக்க முயலுகின்றனர் என்று  வழக்குரைஞருமான அவர் சொன்னார்.