கோத்தா திங்கி நகராட்சி மன்றம் சூராவ் இடிக்கப்பட வேண்டும் என ஒய்வுத் தலத்துக்கு ஆணை பிறப்பித்தது

surau1கோத்தா திங்கி நகராட்சி மன்றம் செடிலி புசாரில் உள்ள Tanjung Sutera ஒய்வுத்  தலத்தில் உள்ள சூராவ் இடிக்கப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

மன்றத் தலைவர் ஹாஸ்ரின் கமால் ஹஷிம் கையெழுத்திட்டுள்ள அதற்கான  நோட்டீஸ் சூராவ் இடிக்கப்பட வேண்டும் என கூறியது.

சிங்கப்பூரைச் சேர்ந்த பௌத்தர்கள் குழு ஒன்று தியானம் செய்வதற்கு அந்த  சூராவைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து சர்ச்சை மூண்டது.surau2

அந்த நோட்டீஸ் கிடைத்த 21 நாட்களுக்குள் இடிக்கப்பட வேண்டும் என்றும்  அந்த நோட்டீஸ் கூறியது.

அதனைச் செய்யத் தவறினால் ஒய்வுத் தல உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை  எடுக்கப்பட்டு சூராவை இடிக்கும் நடவடிக்கையை மன்றம் மேற்கொள்ளும் எனவும்  அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 20ம் தேதியிடப்பட்ட அந்த நோட்டீஸ் இன்று அந்த ஒய்வுத் தலத்துக்கு  வழங்கப்பட்டது. அது சூராவின் நுழைவாயிலுக்கு அடுத்து உள்ள சுவரிலும்  ஒட்டப்பட்டுள்ளது.