தானியக்க செயலாக்கக் கட்டகம் (ஏஇஎஸ்) ஒரு “தேசிய இரகசியம்” என்று கூறிய போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேனை லிம் லிப் எங் சாடியுள்ளார்.
ஏஇஎஸ்-ஸை அதை நிர்வகித்துவரும் இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து எடுத்துக்கொள்ள திட்டமிருப்பதாகவும் அதற்கு அந்நிறுவங்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படலாம் என்றும் ஹிஷாமுடின் நேற்று அறிவித்ததன் தொடர்பில் லிம் கருத்துரைத்தார்.
“அந்த நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் என்ன, அவற்றுக்கு வழங்கப்படும் இழப்பீடு எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள மலேசியர்கள் விரும்புவார்கள்.
“கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நான் அதைக் கேட்டதற்கு அந்த ஒப்பந்தங்கள் இரகசியமானவை என்று அமைச்சர் பதிலளித்தார்.
“இது சாலையோரங்களில் கேமராக்களைப் பொருத்தும் ஒரு விசயம். அதை ஒரு தேசிய இரகசியம் என்கிறார். எம்பிகள்கூட தெரிந்துகொள்ளக்கூடாத அளவுக்கு அதில் என்ன இரகசியம்?”, என்று அந்த செகாம்புட் எம்பி வினவினார்.