கெந்திங் பள்ளத்தில் பஸ் விழுந்தது 33 பேர் மரணமடைந்ததாக அஞ்சப்படுகின்றது

bus49 பயணிகளை ஏற்றியிருந்த பஸ் ஒன்று இன்று பிற்பகல் கெந்திங் மலையிலிருந்து  கீழே செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையிலிருந்து விலகி  பள்ளத்துக்குள் விழுந்தது. அந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்ததாக  அஞ்சப்படுகின்றது.

அந்தப் பஸ் கோலாலம்பூர் சென்ட்ரலை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக  நம்பப்படுகின்றது.bus1

பஸ் 200 அடி பள்ளத்தில் (70 மீட்டர்) விழுந்ததாக தீயணைப்பு, மீட்புத் துறையின்  நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குநர் அஜிஸான் இஸ்மாயில் கூறினார்.

பள்ளத்தில் இன்னும் இருக்கும் 32 பேர் மரணமடைந்திருக்கலாம் என
அஞ்சப்படுவதாக அவர் சொன்னார்.

bus2உயிர்தப்பிய 16 பேர் பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு
செல்லப்பட்டனர் என்றும் அஜிஸான் தெரிவித்தார்.

அவர்களுக்கு சிலாயாங், கோலாலம்பூர், சுங்கைபூலோ மருத்துவமனைகளில்  சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

காயமடைந்த ஆறு பயணிகள் சிலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் மூவருடைய நிலை கடுமையாக இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.