‘புதுக் கிராமம்’ திரையிடப்படுவதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை

new village1சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘புதுக் கிராமம்’ திரையிடப்படுவதற்கு திரைப்படத்  தணிக்கை வாரியம் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை.

அந்தத் திரைப்படம் இரண்டாவது முறையாக மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது  தொடர்பில் அதிகாரிகள் தமக்கு ஏதும் விளக்கமளிக்காதது குறித்து அதன்  தயாரிப்பாளர் எட்வர்ட் தீ ஏமாற்றம் அடைந்துள்ளார்.

“உண்மையில் எங்களுக்குப் பதில் தான் தேவை. ஒன்று அந்தத் திரைப்படத்தைத்  தடை செய்யுங்கள் அல்லது அதன் திரையீட்டை தாமதப்படுத்துங்கள்,” என அவர்  மலேசியாகினியிடம் தெரிவித்தார். இன்று அந்தத் திரைப்படம் திரையிடப்படுவதாக  இருந்தது.

‘புதுக் கிராமம்’ ‘கம்யூனிசத்தை புகழ்வதாக’ பல வலச்சாரி அமைப்புக்கள் புகார்  செய்ததைத் தொடர்ந்து அதன் திரையீடு தள்ளி வைக்கப்பட்டது.

ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்த தயாரிப்பாளர்கள் ‘புதுக் கிராமம்’
‘தடுக்கப்பட்ட காதல் கதையை’ சித்தரிக்கும் குறிப்பிட்ட ‘கால கட்ட திரைப்படம்’  எனக் கூறியுள்ளனர்.