திருமணச் சட்டத்தைத் திருத்துவீர்: ஜஹிட்டுக்கு டிஏபி வலியுறுத்து

1 divorceமணவிலக்கு பெற்றாலும்கூட, 18-வயதைத் தாண்டிய பிள்ளைகளின் கல்விக்குப் பெற்றோர் இருவரையுமே பொறுப்பாக்கும் வகையில் திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர்  அஹ்மட் ஜஹிட் ஹமிடியை கூலாய் எம்பி தியோ நை சிங்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“மணவிலக்கு பெற்ற முஸ்லிம்-அல்லாத பெற்றோரின்   பிள்ளைகளின் நலன்கருதி இந்தத் திருத்தம் செய்யப்பட்ட வேண்டும்”, என டிஏபி-இன் விளம்பரப் பிரிவு உதவிச் செயலாளருமான தியோ நை  அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

திருமணச் சீர்திருத்த (திருமணம் மற்றும் மணவிலக்கு) சட்டம், 1976, மணவிலக்கு பெற்ற ஒருவருக்கு பிள்ளைகளுக்கு பண உதவி செய்யும் பொறுப்பு பிள்ளை 18-வயதை எட்டியதும் முடிவுக்கு  வருகிறது எனக் குறிப்பிடுகிறது.