நேற்று கெந்திங் மலை பள்ளத்தில் விழுந்த பேருந்து போலீசால் கறுப்புப் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
அது, சாலைப் போக்குவரத்துத் துறை(ஜேபிஜே)யால் கறுப்புப் பட்டியலிடப்படவில்லை. மலேசியாகினி தேடிப்பார்த்ததில் இத்தகவல் தெரிவந்தது.
போக்குவரத்துக் குற்றங்களுக்காக பல போலீஸ் சம்மன்கள் கொடுக்கப்பட்டதை அடுத்து அது போலீசால் கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளது என ஜேபிஜே பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பேருந்து விபத்து தொடர்பில் போலீஸ் அறிக்கைக்காக ஜேபிஜே காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இணையதளங்களின் உதவியால் தகவல்கள் துரிதமாகவே செயல் படுகின்றன. இதுவே பத்து வருடங்களுக்கு முன்பாக நடைப் பெற்றிக்குமேயானால், எவ்வளவோ விஷயங்கள் மறைக்கப் பட்டிருக்கும். ஆமாம், போக்குவரத்து அமைச்சர் என்று ஒருவர் இருப்பாரே, யார் அவர்? என்ன பெயர்? எங்கே போனார்?
யாருக்கு அதிக அதிகாரம் ? PDRM OR JPJ ? போலீசாரால் கருப்பு பட்டியலிடபட்ட பேருந்து , JPJ வால் அங்கீகாரம் பெற்றுள்ளது! அது எப்படி ? காரம் கேட்டால் ISA என்பார்கள் ! கருப்பு பட்டியல் லிஸ்ட் JPJ விடம் கொடுக்கப்பட்டதா? அப்படியென்றால் road tax எப்படி புதுபிக்கப்பட்டது ? 37 பேர் உயிர்பலி , இதற்க்கு யார் பொறுப்பு ? போன உயிர் திரும்பி வருமா ? “ஒரு அந்நியன் ” தேவை!