பிடிபிடிஎன் எனப்படும் தேசிய உயர் கல்வி நிதிக்கு செலுத்த வேண்டிய கடன்கள் பெருகுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ள அந்தக் கடனைப் பெற்றவர்கள் பற்றிய ஒர் ஆய்வை பிகேஆர் தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 29ம் தேதி இரவு மணி 8.30க்கு பெட்டாலிங் ஜெயா நகராட்சி மன்ற நூலகத்தில் நடைபெறும் ‘Tweetup’ என்னும் நிகழ்வில் அந்த ஆய்வு முடிவுகள் சமர்பிக்கப்படும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி தெரிவித்தார்.
பிடிபிடிஎன் எதிர்ப்புக் குழுவை அமைப்பதற்கும் அந்த முடிவுகள்
பயன்படுத்தப்படும் என அவர் மேலும் சொன்னார்.
இணையம் வழி நடத்தப்படும் அந்த ஆய்வுக்கான இணையத் தள முகவரி: http://siasatptptn.wordpress.com என்பதாகும். பிடிபிடிஎன் கடன்களைப் பெற்றவர்களுடைய கல்வித் தகுதி, பொருளாதார நிலை, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆற்றல் ஆகியவை பற்றிய விவரங்கள் ஆய்வின் போது திரட்டப்படும்.