அளவுக்கதிகமான பல்கலைக்கழகங்களா?

1 collegeநம் நாட்டில் 21  அரசாங்கப் பலகலைக்கழகங்கள், 37  தனியார் பல்கலைக்கழகங்கள், 20 தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிகள், 7  வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கிளை வளாகங்கள், 414 தனியார் கல்லூரிகள்,  30 தொழில்நுட்பப்பயிலகங்கள் (போலிடெக்னிக்குகள்),  73  சமூகக் கல்லூரிகள் என மொத்தம்  602 உயர்கல்விக் கழகங்கள் உள்ளன.

பலவகையான  கல்விக்கூடங்கள்  பல்வகை கல்விகளை வழங்குவது தேவைதான். ஆனாலும் கவனம் தேவை  என்று எச்சரிக்கிறார்  யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா இணை பேராசிரியர் நோர்ஸைனி அஸ்மான்.

“கல்வி தாராளமயமாக்கல் என்பது கல்வியை விற்பனைச் சரக்காக்கி ஆதாயம் காணும் சந்தர்ப்பவாதிகள் உருவாவதற்கு இடமளித்திருக்கிறது”,என்றவர் சுட்டிக்காட்டுகிறார்.

Go to KiniBiz for more.