2016ம் ஆண்டு மஇகா தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதை ஜி பழனிவேல் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு உதவியாக 2016ம் ஆண்டு முதல் கால் பகுதியில் தமது தவணைக் காலத்தின் இறுதியில் தாம் விலகப் போவதாக இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சருமான பழனிவேல் சொன்னார்.
என்றாலும் அது ஒப்புக் கொள்ளப்பட்ட அல்லது சமரசத்திற்கான நிபந்தனையோ அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
“சமரசம் ஏதுமில்லை. நான் மேலும் ஒரு தவணைக் காலம் தான் கோரினேன். நான் அதனைப் பல முறை அறிவித்து விட்டேன்,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.
அதற்கு முன்னதாக கோலாலம்பூரில் மஇகா தலைமையகத்தில் கட்சியின் தொகுதித் தலைவர்களுடன் பழனிவேல் ரகசியக் கூட்டம் நடத்தினார்.
மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் டத்தோ! முந்தையா தலைவர் காலத்தில் அவர் வகித்த, கை வசமிருந்த ம.இ.கா அணைத்து சொத்துக்களும், அணைத்து பொறுப்புகளுக்கும் தற்போதைய தலைவர் என்ற முறையில் நீங்கள்தான் பொறுப்பு ஏற்க்க வேண்டும். அவர் இருக்கும் வரை அவர் , அவருக்குப் பின் யாரோ அவர்தானே அந்த இடத்திற்கு வரவேண்டும்? இல்லையென்றால் பொது மக்கள் சொத்து தனி ஒருவரின் சொத்தாகிவிடும்.
இதுவரை சுருட்டியதையும் இன்னும் சுருட்ட போவதையும் பாதுகாப்பாக வைக்க இடம் தேட பழனிவேலுக்கு இன்னும் ஒரு தவணை தேவைதான்.இன்னும் AIMST University யின் பங்கு பிரிக்கப்படவில்லை யா ?
தீயா வேலை செய்யணும் டதோ! இல்லனா, எல்லாதையும் சுருட்டி
நமக்கு எல்லாம் பட்டை நாமம் போட ஒரு கூட்டம் ரெடியாக இறுக்குது . ம இ கா சொத்தை எல்லாம் கூறு போட ஒரு சொட்ட தலைவன் பெரிய பிலான் போட்டுக்கிட்டு இருக்கான். இந்த மூணு வருஷதுள்ள எல்லா குள்ள நரிகளையும் , பொரம் போக்கு புன்னக்குகளையும் களை பறிக்க வேண்டும் தலைவா! . இல்லையென்றால் ம இ கா வை காப்பாத்த முடியாத அளவுக்கு அழிஞ்சு போயிடும்.
3 வருடம் என்பது அரசியலைப் பொறுத்த வரைக்கும் நீண்ட காலம். எது வேண்டுமானாலும் நடக்கும். நண்பன் பகைவனாவான், பகைவன் நண்பனாவான். இருப்பவன் இல்லாமலும் போவான், புதிய தலைவனும் முளைப்பான். இலவு காத்த கிளியாக ஆகப் போகின்றவர் யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பழனி நீ என்ன சாதனை செய்தாய்,,,,,,இன்னும் 2016 உனக்கு தேவை,,,,ஒரு வேலை 2020 தில்,,நம் சமுதாயம் 50% உருபடாமல் போவார்களா?????????????????????
பழனி நல்ல தலைவர் . வாழ்க பல்லாண்டு .
ஊமை சாமி இன்னும் பலமுறை மலையேறும் இறங்கும்.இதுவரை இந்த தலைவன் எதற்காவது திருவாய் திறந்துலாரா ?எஸ் பி எம் மாணவர்களுக்கான 1500 இடங்கள் என்னவானது? தமிழ் பள்ளிகளின் எதிர்காலம் புதிய கல்விக்கொள்கையால் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கி இருக்கிறதே இதற்கு என்ன செய்ய போகிறார் இந்த தலைவர்? எதற்கு பிரதமர் காலில் விழுந்து போட்டி வேண்டாம் என்று கேட்கவேண்டும்.தோல்வி பயம் தானே? இன்னும் 3 வருடம் என்றால் எல்லாம் சர்வ நாசம்.அதன் பின் தலைவர் ஆஸ்திரேலியாவுக்கு குடி போய்விடுவார்.
ஒற்றுமைக்கு தமிழனே இலக்கணம் என்று நிரூபித்துவிட்டீர்களே!!!!
சூப்பர் அப்பா நீங்கள்….
நாங்கள் மஇகா வே வேணான்னு இருக்கும், பழனிவேல் கட்சி யில் இருந்தா என்ன இல்லேன்னா என்ன.
அடுத்த ம இ கா(காக்க கா) வேள்பாரி , சாமி குரிசொல்லியசு . பணிவேல் பழனிக்கு போகவேடியதுடன், சுப்ரமணியம் ,சரவணன் போன்ற திறமையான , வர்களுக்கு , அம்மம் சாமி போட்டு கொண்டு இருக்க வேண்டியது தன். கோவித்த கோவிந்த.