‘சமூக பொருளாதார இடைவெளிக்கு தாய் மொழிப் பள்ளிகள் காரணமல்ல’


schoolsசீன தமிழ் தாய் மொழிப் பள்ளிக்கூடங்களுக்கு இடையில் தரத்தில் நிலவும்  வேறுபாடு சமூக பொருளாதார இடைவெளி விரிவடைவதற்கு வழி வகுக்கக் கூடும்.  ஆனால் அந்த நிலைக்குத் தாய் மொழிப் பள்ளிக்கூடங்கள் மீது பழி போடக் கூடாது என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் சொல்கிறார்.

தேசியப் பள்ளிக் கூட முறையில் காணப்படும் மோசமான தரமே பிரச்னைக்குக் காரணம் என அவர் கருதுகிறார்.

தேசியப் பள்ளிக்கூடங்களில் தரம் மோசமாக இருப்பதால் பெற்றோர்கள்-சீனர் அல்லாத குடும்பங்கள் உட்பட தங்கள் பிள்ளைகளை கல்வித் தரம் உயர்வாக இருப்பதாகக் கருதப்படும் சீன தாய் மொழிப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதாக
அவர் சொன்னார்.

“நமது கல்வி முறையில் தரத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதற்கு வழி வகுத்தது அந்த அம்சமாகும். தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் போதுமான மாணவர் எண்ணிக்கை இல்லை என்பது காரணமல்ல.”

சீனப் பள்ளிக்கூடங்கள் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்
முதலீடுகளையும் பணத்தையும் கவர முடிவதுடன் ஒப்பிடுகையில் தமிழ்ப் பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றார் ராபிஸி.

ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் சிறுபான்மை மக்கள் பிரச்னைகள் மீது நிபுணரான ரீத்தா இஸ்ஹாக் நேற்று விடுத்த அறிக்கை பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது ராபிஸி அவ்வாறு கூறினார்.

தமிழ்ப் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் சீனப் பள்ளிக்கூடங்களின் தரம் உயர்வாக இருப்பதால் எதிர்காலத்தில் சமூக பொருளாதார இடைவெளிக்கு வழி வகுத்துவிடும் என ரீத்தா சொன்னதாக பிரி மலேசியா டுடே செய்தி இணையத் தளம் செய்தி  வெளியிட்டிருந்தது.