அல்லாஹ்’ விவகாரம் மீது உள்துறை அமைச்சும் அரசாங்கமும் சமர்பித்த முறையீட்டைத் தள்ளுபடி செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியில் கத்தோலிக்கப் பேராயர் மர்பி பாக்கியம் தோல்வி கண்டுள்ளார்.
அந்த முறையீட்டை தள்ளுபடி செய்வதற்கு பேராயர் சமர்பித்த நோட்டீஸ் மனுவை ( notice of motion ) நீதிபது அபு சாமா நோர்டின் தலைமையிலான மூவர் கொண்ட முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு ஏகமனதாக நிராகரித்தது.
அந்த விவகாரம் ஏட்டளவிலானது ( academic) அல்ல என்றும் அது இன்னும் ‘உயிருள்ள பிரச்னை’ என்றும் அவர்கள் தீர்ப்பளித்தனர்.
“மறு விசாரணை கோருகின்றவருடைய (பேராயர்) விண்ணப்பத்தை நாங்கள் இப்போது நிராகரிக்கிறோம்,” என நீதிபதி அபு சாமா சொன்னார்.
நீதிபதி அப்துல் அஜிஸ் அப்துல் ரஹிம், நீதிபதி ரோஹானா யூசோப் ஆகியோர் மற்ற இரண்டு இரண்டு நீதிபதிகள் ஆவர்.
2011ம் ஆண்டு கிறிஸ்துவ சமூகத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வழங்கிய 10 அம்சத் தீர்வு அடிப்படையில் முறையீட்டைத் தள்ளுபடி செய்யுமாறு பேராயரும் தேவாலய சஞ்சிகையான ஹெரால்ட் வீக்லி-யும் விண்ணப்பம் செய்து கொண்டிருந்தனர்.
இந்த சர்ச்சை தேவை தானா அல்லா எனும் வார்த்தைக்கு ஏன் இப்படி சர்ச்சை