சர்ச்சைக்குரிய தண்டா புத்ரா திரைப்படத்தில் முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் இல்லத்தில் இருந்த கொடிக் கம்பத்தின் மீது சீன இளைஞர்கள் குழு ஒன்று சிறுநீர் கழிப்பதை காட்டும் காட்சி ‘கற்பனையானது’ ‘முடியாத காரியம்’ என மே 13 கலவரத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் சொல்கிறார்.
அந்த கொடிக் கம்பம் கடுமையான காவல் போடப்பட்டிருந்த வளாகத்துக்குள் இருந்ததுடன் மந்திரி புசாரே அந்தக் கொடிக் கம்பத்துக்கு முன்பு அமர்ந்திருந்தார் என அப்போது மாரா தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவராக இருந்த அகமட் ஹபிப் சொன்னார்.
“மந்திரி புசார் வீட்டைச் சுற்றிலும் செங்கல் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. நான் முதலில் அதிகாலை மூன்று மணிக்கு (மே 14ம் தேதி) நுழைந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் கொடிக் கம்பத்துக்கு முன்பு உள்ள புல் தரையில் அமர்ந்திருந்தனர்.”
“ஆகவே அந்தக் கொடிக் கம்பத்தின் மீது ஒருவர் சிறுநீர் கழித்ததாகச் சொல்வது அபத்தமானது,” என அகமட் சொன்னார்.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கும்போது , ஒருசில கற்பனைகள் கலந்த காட்சிகளும் இடம்பெறவே செய்யும் . ஆனால் அந்த கற்பனை திணிப்பு சர்சையை அல்லது குழப்பத்தை அல்லது சினமூட்டும் தன்மையாய் இருபது தவறு . வேண்டுமென்றே ஒரு இனத்தை குறிவைத்து அவதூறான செய்திகளை பரப்புவது மிக மோசமான செயலாகும். அடுத்த கலவரத்துக்கு வித்திட்டுவிடும் .