கெடாவில் இன்னும் எஞ்சியுள்ள ’04’ ரகசியக் கும்பல் உறுப்பினர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 18ம் தேதி Ops Cantas தொடங்கப்பட்டது முதல் போலீசார் 58 ரகசியக் கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்துள்ளதாக கெடா போலீஸ் தலைவர் அகமட் இப்ராஹிம் சொன்னார். அவர்களில் ’04’ ரகசியக் கும்பல் உறுப்பினர்களும் அடங்குவர்.
பாலிங், சுங்கைப் பட்டாணி, கூலிம் போன்ற அந்தக் கும்பல் அடிக்கடி நடமாடும் இடங்களில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
“நாங்கள் அதனைச் செய்யா விட்டால் அவர்கள் திரும்பவும் செயல்படுவர். இது வரையில் போலீசார் 335 பேரை விசாரித்துள்ளனர். ரகசியக் கும்பல் உறுப்பினர்களும் குண்டர்களும் பயன்படுத்தியுள்ள 356 வாகனங்களை சோதனை செய்துள்ளனர்,” என்றும் அவர் ஜித்ராவில் இன்று காலை நிருபர்களிடம் கூறினார்.
என்னமோ போலிசுக்கு இதுவரையில் இவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாயதது போலவும் இன்றுதான் தூக்கத்தில் இருந்து எழுந்தது போலவும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதுநாள் வரை வாங்கிய மாமூல் அவர்களை வளர்த்து விட்டது. இன்று வளர்த்த கடா மார்பில் பாய்கின்றது. ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
காவல் துறை தீவிரமாக செயல்பட்டு இந்த குண்டர் கும்பலை முற்றாக துடைதொழிக்க வேண்டும். செத்து ஒழியட்டும், இவர்களின் ஈவு இரக்கமிலா செயல்,எத்தனை தாய்மார்களுக்கும் குடும்பத்திட்கும் வேதனையை கொடுத்திருக்கும். கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டவரை கேளுங்கள் “சுட்டுதள்ளட்டும் இந்த நாய்களை” என்று கூறுவார்கள்.
தேனி சொன்னது உண்மைதான். குண்டர் கும்பல் இந்த அளவுக்கு துணிச்சலுடன் செயல்படுவதற்கு போலீசார்தான் முக்கிய காரணம். தொடக்கத்திலேயே அவர்களை ஒடுக்கியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. நமது இனத்தில் இத்தனை உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்காது.
பெயருக்கு ஓரிரு இடங்களில் இந்த சூட்டு சம்பவங்கள் இடம்பெறலாம். அப்புறம் அடங்கி விடும். நம் நாட்டில் குண்டர்களைடோ, கொள்ளையர்களையோ துடைத்தொழிக்க போலிஸ் முயலாது. குண்டர் கும்பல் ஒழிந்துவிட்டால், மாதா மாதம் யாரிடம் போய் மாமூல் வசூல் செய்வது?
சூப்பரான கருத்தகளை வெட்ட வெளிச்சமாக எழுதுகிறீர்களே!!!!
பாருங்களேன் போலீசுக்கு பொத்துக்கிட்டு வரும்….
குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும்….