பிரதமர் துறை துணை அமைச்சர் பி வேதமூர்த்தி அரசாங்கம் வகுத்த பாதையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்கக் கொள்கைக்கு முரணான அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்றும் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அவருக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
“அவர் (வேதமூர்த்தி) தம்மை அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றின் தலைவராக தொடர்ந்து கருதக் கூடாது. ஹிண்ட்ராப் (இந்து உரிமை நடவடிக்கைக் குழு) தலைவரைப் போன்றும் அவர் சிந்திக்கக் கூடாது. போலீஸ் பணியில் தலையிடக் கூடாது,” என அகமட் ஸாஹிட் நிருபர்களிடம் கூறினார்
பினாங்கில் கடந்த திங்கட்கிழமை சந்தேகத்துக்குரிய ஐந்து குண்டர்கள்
கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று குறித்து போலீஸ் அளித்த விளக்கம் மீது வேதமூர்த்தி கேள்வி எழுப்பியதாகச் சொல்லப்படுவது குறித்து கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அகமட் ஸாஹிட் அவ்வாறு கூறினார்.
இதிலிருந்து தெரியவில்லையா? இவனைப்போன்ற துரோகிகள் இருக்கும்வரை நமக்கு விடிவு இல்லை.
இதுவும் வேண்டும் அய்யா, இன்னமும் வேண்டும் அய்யா ..
சொந்தமாக வாய் பூட்டு, போட்ட கோமாளி …!
மாண்புமிகு உள்துறை அமைச்சர், மகா கணம் பொருந்திய துணை அமைச்சர் வேதமூர்த்தி இனி அமைச்சராக நீடிக்க வேண்டுமென்றால் அரசாங்கம் எடுக்கும் அத்தனை முடிவுகளையும் முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்ற மறை முக ஆணை அளித்துள்ளார்.
பாவமடா இந்த எட்டப்பன் வேதமூர்த்தி. அடிமேல் அடி. உள் துரை துணை அமைச்சராம். இவரை வேலை செய்ய விடாமல் சிலர் தடுக்குகிறார்கலாம். அப்படி வேலை செய்ய விடாவிட்டால் மந்திரி பதவியை ராஜினாம செய்து விடுவாராம். அம்னோகாரன்கள் எவனும் உன்னை மதிக்கவில்லை. உள்துரை அமச்சரின் இந்த உத்தரவு உமக்கு பேரடி மட்டுமல்ல. மானப் பிரச்சனையும் கூட. நீ மான ரோஷம் உள்ள சுத்தத் தமிழனாய் இருந்தால், உன் பதவியை ராஜினாம செய் பார்ப்போம், மானங்கெட்டவனே. இப்பதவியில் இருந்து கோண்டு இனி நீ எதுவும் செய்ய முடியாது என்று மலேசியத் தமிழர்கள் அத்தனைப் பேருக்கும் தெரியும். அது உனக்கும் தெரியும். உன் சொந்த நலனுக்காக அம்னோகாரன் காலை நக்குவதை விட, நாக்கை பிடிங்கிக் கொண்டு ச……..மேல்.
ஐயா வேதமூர்த்தி அவர்களே,
அரசாங்கம் போட்ட எலும்புத் துண்டை கவ்விக்கொண்டு, கம்முன்னு இரு என்று சொல்லாமல் சொல்லிவிட்டான் இந்த அம்னோகார அமைச்சர்.
நிமிர்ந்து நில்…துணிந்து செய்… தோல்வி கிடைப்பது நிச்சயம்..
இதனால் பதவியை துச்சம் என்று உதறிவிட்டு வெளியே வா. மானம் மரியாதையாவது மிஞ்சும்…
வாகன லைசென்ஸ் இல்லாமல் ஒரு வெளிநாட்டு தொழிலாளியான வங்காள தேசி ஒருவன் வாகனம் செலுத்தி வருகிறான். ‘லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுகிறாயே, போலீசிடம் பிடிப்பட்டால் என்ன செய்வாய்?’ என கேட்டதற்கு, அவன் சொல்கிறான், ‘போலீசிடம் கொஞ்சம் சில்லறை நீட்டுவேன், அவன் எடுத்துக் கொண்டு போய் விடுவான்.?’ என்கிறான். நம் நாட்டுக்கு கூலி வேலை செய்ய வந்த வெளிநாட்டுக் காரன் நம் போலீசாரின் தரத்தை இப்படி கூறுகிறான். இப்பேற்பட்ட போலிசுக்கு அமைச்சர்தான் இந்த சாஹிட் ஹமிடி. வேதமூர்த்திக்கு அறிவுரை கூறும் தகுதி இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு உண்டா?
புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்?
உள்துறை அமைச்சருக்கு யாரவது மொழி பெயர்த்து கூறுங்களேன்.
சும்மா வேதமூர்த்தி மீது வெறுப்பை உமிழாமல் அவர் சொல்லும் விசயத்தில் உள்ள நியாயத்தை பாருங்கள். நம்மை கேவலமாக மற்றவர்கள் பேசும் போது நாமும் அதற்கு துணை போகலாமா?
அன்று மகாதீரும் சாஹிட் கு இதைத்தான் சொல்லி கேக்காமல் அம்னோ பதவிகளில் இருந்து சாஹிட் தூக்கப்பட்டு வெறுமையானார் அன்றைய சாஹிட். பிரதமர் சொல்ல வேண்டியதை எல்லாம் அமைச்சர்கள் சொல்வதால் பிரதமருக்கு வேலை இல்லை .
வேதமுர்த்தி ராஜினாமா செய்து விட்டால் எல்லாம் சரி ஆகிடுமா நண்பா. தமிழன் நாகரீகமாநவன் சோ வார்த்தை கவனம் ப்ளீஸ்,தேங்க்ஸ்.
அவர் பாதை-இல் விடுங்கள் அவாரும் ஒரு அறிவாளி …
வேத மூர்த்தி என்ன பொம்மையா வாயை மூடிகிட்டு இருக்கணும் என்று.மனித உரிமைக்கு போராடியவர் அரசாங்கதில் இருந்துவிட்டால் எல்லாத்தையும் சகிதுக்கொள்ளவேண்டுமா ? ஏன் அம்னோகாரன் அரசாங்கதில் இருந்துகொண்டு இந்தியர்களை அசிங்கபடுதவில்லையா? அந்த ஹிண்ட்ராப் தலைவர்கள் பட்ட துன்பத்தை நினைத்து பார்க்க வேண்டும்.
இதுவும் வேண்டுமடா உனக்கு
இன்னமும் வேண்டுமாடா கொத்தும் பாம்புடன் ….
முருக பத்தர் கிருபானந்த வாரியார்- 70 களில் KL விவேகந்தர் ஆசிரமத்தில் ஒரு சொற்பொழிவில் … “அரச சபை, நடு மண்டபத்தில் துரியோதனன் பாஞ்சாலியை துயிலுரிகிறான்! பாஞ்சாலியோ கதுருகிறாள் , கத்துகிறாள், அலறுகிறாள் … உதவிக்கு யாருமில்லை! பொதுமக்களும் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்கிறார்கள் .. இங்கு நீங்கள் எப்படி நிற்கிறீர்களோ அப்படி! அரசாங்கத்தில் என்ன நடந்தாலும் அது நமக்கென்ன என்று இருந்தால் பாஞ்சாலிக்கு ஏற்பட்ட அவலம்தான் அனைவருக்கும். இந்த பொன்மொழியை மறந்தோமானால் நாளை நம் நிலையம் இப்படிதான். சிந்திப்போம்!!
தைரியமாக போராடு.. நியாயம் உம் பக்கம் திரும்பவில்லை என்றால் உமது முயற்சியாவது மக்களுக்கு தெரியட்டும்.
குறைந்தபட்சம் இந்த அரசாங்கத்தின் போக்கு இந்திய மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரியவரட்டும்..!!!!
கொண்டான் கொடுத்தான் வீட்டுக்கு போய் இப்படியா குடுமி அறுபடனும்….? என்ன அறிவாளியாக இருந்தாலும் ” ஏழை ( இயலாதவன் ) பேச்சு அம்பலம் ஏறாது” இனி அரசு கழுவி ஊத்துரதை வாங்கி குடிச்சிட்டு வர வேண்டியாதுதான்…நெறைய அதுதானே நடக்குறது.