நாட்டுப் பண்ணை அவமதித்தால் சிறையில் தள்ளப்படலாம், தெரியுமோ?
நாட்டுப் பண் சட்டம் 1968-இன்படி ‘நெகாரா கூ’ இசைக்கப்படும்போது அதற்கு மரியாதை அளித்து எழுந்து நிற்காவிட்டால் ரிம100 அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஒரு மாதம்வரை சிறையில் தள்ளப்படலாம்.
எழுந்து நிற்பது மட்டும் போதாது, நாட்டுப் பண்ணை அவமதிப்பதுபோல் நடந்துகொள்ளவும் கூடாது என்றும் வழக்குரைஞர் டேவிட் மத்தியூ எச்சரிக்கிறார்.
“எழுந்து நிற்கும்போது கையை அசைப்பது, சாப்பிடுவது போன்றவை அவமதிப்பதாகக் கருதப்படலாம்”, என்றாரவர்.
நாட்டுப் பண்ணை அவதிக்கும் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அதற்கு தண்டை கொடுப்பதும் ஞாயமே. இதைவிட கொடுமையான செயல் நம் நாட்டில் உள்ளது. அதை யாருமே கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஆம்! அதுவேதான்! லஞ்சம். லஞ்சம் பெறுபவர்களுக்கு தூக்கு தண்டனையே தரவேண்டும் என ஒரு அறிஞர் கூறியுள்ளது இங்கே ஞாபகத்திற்கு வருகிறது. நம் நாட்டில் போகும் இடமெல்லாம், பார்க்கும் இடமெல்லாம் லம்சம் பெருத்து விட்டது. இந்த லஞ்சத்தால் மலேசியன் என்று சொல்லிக் கொள்வதற்கே வெட்கமாக உள்ளது. இந்த வேசித்தன லஞ்சத்தால் கேமரன் மலை காடுகளே அழிந்து வருகிறது. வெளிநாட்டு கூலிகள் அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து காடுகளை அழிக்கிறார்கள். இதனை பார்க்கும் நமக்கு, கண்களில் ரத்தம் வழிகிறது.
ஆழ்மனதிலிருந்து வர வேண்டும், சுதந்திரதன்று மந்திரிகள் அசையாமல் நிற்கிறார்களா பாருங்கள் போதும்,
மூக்கை நோன்றிக்கொண்டு இருப்பார்கள், நான் மலேசியன் லவ் மலேசியா காதல் மலேசியா