அரசாங்கம், தானியக்க செயலாக்கக் கட்டகம் (ஏஇஎஸ்) உள்பட, அதன் கொள்முதல் ஆவணங்கள் அனைத்தையும் இரகசியப் பட்டியலிலிருந்து அகற்ற வேண்டும் என ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல்- மலேசியா (டிஐ-எம்) கேட்டுக்கொண்டிருக்கிறது.
“அதிகாரத்துவ இரகசியம் என்பதை இராணுவத் தற்காப்புத் தளவாடக் கொள்முதல் ஆவணங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற ஆவணங்கள் அனைத்தையும் மக்கள் பிரதிநிதிகள் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
“எல்லா விசயங்களிலும் அரசாங்கம் கமுக்கமாக செயல்பட்டு வருவதாகவே ஒரு எண்ணம் இருப்பதால் இது, அரசாங்கத்தின்மீது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்”, என டிஐ-எம் நேற்று ஓர் அறிக்கையில் கூறியது.
ஏஇஎஸ் ஒப்பந்தங்கள் இரகசியமானவை எனக் கூறப்பட்டிருப்பதன் தொடர்பில் அது இவ்வாறு கூறியுள்ளது.