மனித உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான சுவாராம், மங்கோலியரான அல்டான்துயா ஷரிபுவின் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் இருவர் விடுவிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளது.
“அதிர்ச்சிதரும் தீர்ப்பு…அப்படியென்றால் அவரைக் கொன்றவர்கள் யார்?”, என்று சுவாராம் இயக்குனர் சிந்தியா கேப்ரியல் கேள்வி எழுப்பினார்.
“அவர் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற கேள்வியும் எழுகிறது. சி4 வெடிமருந்துகள் எப்படி கிடைத்தன? சி4, 7- இலவன் கடைகளில் விற்கப்படும் சரக்கல்லவே”, என்றாரவர்.
இன்றைய தீர்ப்பு அல்டான்துயாவின் கொலை குறித்து முழுமையான விசாரணையைப் புதிதாக தொடங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாக கேப்ரியல் குறிப்பிட்டார்.
டத்தோ ஷுஹாய்மி பாபாவை அழைத்து ” மங்கோலிய அல்டான்துயா ஷரிபுவின் மர்மம்” என்ற திரைப்படத்தினை எடுத்தால் சும்மா சூப்பெராக ஓடும் இந்த ‘மலேசியா பொலெஹ்’ நாட்டில்…
‘X file ‘ சீரியலேயே மிஞ்சிவிடும் போலிருக்கிறது….
அநியாயத்திற்கு துணைபோகும் இன்னொரு அநியாயம் ! சட்டம் ஒரு இருட்டறை என்பதற்கு பதில் , சட்டம் ஒரு ஓட்டைப் பானை என்பதுதான் சரி !
நம்ம “இஞ்சி சப்பாத்தி” ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா..