ஈசா சமாட் வீட்டில் கொள்ளை

Isaபெல்டா தலைவர் முகமட் ஈசா அப்துல் சமாட் வீட்டில் இன்று அதிகாலை  திருட்டுப் போனது.

நெகிரி செம்பிலான் சிராம்பானில் உள்ள நிலாய் ஸ்பிரிங்-கில் உள்ள அவரது  வீட்டில் அந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சின் சியூ டெய்லி தகவல்  வெளியிட்டுள்ளது.

அதிகாலை மணி 4.00 வாக்கில் பாரங்கத்திகளை வைத்திருந்த நான்கு ஆடவர்கள்  வீட்டுக்குள் புகுந்ததாக  அந்தச் செய்தி தெரிவித்தது.

திருட்டுச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் இரண்டு துணை போலீஸ்காரர்கள் உட்பட  அறுவர் வீட்டில் இருந்தனர்.

கொள்ளையர்கள் அந்த அறுவரையும் மடக்கிய பின்னர் வீட்டைக்
கொள்ளையடித்ததாக சின் சியூ கூறியது.

நெகிரி செம்பிலான் ஜெம்போலில் இப்போது இருக்கும் முகமட் ஈசா அந்த  கொள்ளைச் சம்பவம் பற்றிக் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

நெகிரி செம்பிலானில் கடந்த மூன்று மாதங்களில் பிரமுகர்கள் வீட்டில் நிகழ்ந்துள்ள  இரண்டாவது கொள்ளைச் சம்பவம் இதுவாகும்.

மே மாதம் மந்தினில் உள்ள தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு  பாக்காரின் சகோதரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது.

அண்மையில் இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் வீட்டில்  திருட்டுப் போனது.