முஹைடின்: கல்வித் தரம் சரிவதைக் காண டோங் ஜோங் விரும்புகிறதா ?

dong jongமலேசிய ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம் (டோங் ஜோங்) தேசியக் கல்விப்  பெருந்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் தீய நோக்கம் ஏதும் உள்ளதா என  துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாங்கள் அந்தப் பெருந்திட்டத்தில் செய்வது சட்டத்திற்கு எதிரானது அல்ல. தாய்  மொழிப் பள்ளிக்கூடங்களுக்கு தேசியக் கல்வி முறை மருட்டலாக மாறாது  இருக்கும் பொருட்டு அந்தக் கல்வி முறை பின்னோக்கிச் செல்வதைக் காண  டோங் ஜோங் வேண்டுமென்றே விரும்புகிறதா ?” என அவர் வினவினார்.

“அதன் நோக்கம் தான் என்ன ? அது தான் அவர்கள் எண்ணம் என்றால் அது  அவர்களுடைய தீய நோக்கமாகும்,” என அவர் சொன்னதாக அம்னோவுக்குச்  சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தாய்லாந்துக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள முஹைடின், தேசியக் கல்விப்  பெருந்திட்டம் சீன தாய் மொழிக் கல்வி முறையை கீழறுப்புச் செய்து விடும்  என்பதால் அதனை எதிர்ப்பதாக டோங் ஜோங் கூறிக் கொண்டுள்ளது பற்றி  அவ்வாறு குறிப்பிட்டார்.