மங்கோலிய மாது அல்தாந்துயா கொலை வழக்கில் முறையீட்டு நீதிமன்றம் மறு விசாரணைக்கு ஆணையிடாதது குறித்து முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராஹிம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
“நாம் உண்மையை அறிந்து கொள்வதற்கு அந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என நிச்சயம் நீதி நடைமுறை வலியுறுத்தும். அல்தான்துயா ஏன் கொல்லப்பட்டார் என்பது இப்போது யாருக்கும் தெரியப் போவதில்லை,” என அவர் தமது டிவிட்டர் பதிவில் எழுதியுள்ளார்.
“முக்கியமான சாட்சிகள் ஏன் அழைக்கப்படவில்லை என்பதை நாம் வேறு எப்படித் தெரிந்து கொள்ள முடியும்…. ஏன் இத்தகைய போலியான (shoddy) அரசு தரப்பு…”
“நான் முறையீட்டு நிதிமன்ற நீதிபதிகள் மீது ஏமாற்றம் அடைந்துள்ளேன். விடுதலை செய்யப்பட்டதற்காக அல்ல. மறு விசாரணை நடத்தப்படுவதற்கு உத்தரவிடத் தவறியதற்காக,” என ஜைட் மேலும் சொன்னார்.
அதெப்படி முடியும்?? மறுவிசாரணை செய்து உண்மை வெளியாகிவிட்டால்???
மூடி மறைப்பதற்குதானே இந்த அரசு தரப்பு ……
மேல் முறையீடு செய்வதற்குள் குறிப்பிட்ட இரு போலீஸ்காரர்களையும் லண்டனுக்கு உடனடியாக அனுப்பிவிடுங்கள்…..
கேஸ் தூதுப்…குளோஸ் !!!!!!.
நேர்மையான செய்கைகள், நீதியான அமலாக்கங்கள் மிக2 அபூர்வமாகி வருகிறது நம் நாட்டில்…..! மதத்தை எதிலும் முன்னிறுத்துவது வெறும் அரசியல் உயிர் வாழ்விற்காக மட்டுமே.
நேர்மையான நீதிமன்றமாக இருந்தால்….இறைவா உமக்கே வெளிச்சம்.