மங்கோலிய பெண்மணி அல்டான்துயா ஷாரிபுவைக் கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து முறையீட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போலீஸ் சிறப்பு நடவடிக்கை பிரிவின் முன்னாள் தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹட்ரி, தீர்ப்பளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே காஜாங் சிறையிலிருந்து வெளியேறி விட்டார்.
அவரைச் சந்திப்பதற்காக சிறை வாயிலில் செய்தியாளர்களும் படப்பிடிப்பாளர்களுமாக சுமார் 20 பேர் காத்திருந்தார்கள்.
ஆனால், “காலை மணி 11.45-க்கு உறவினர்களுடன் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக புறப்பட்டுச் சென்று விட்டார்”, என சிறைத்துறை தலைமை இயக்குனர் சுல்கிப்ளி ஒமார் அவர்களிடம் தெரிவித்தார்.
இனிமேல் அவரை யாராலுமே சந்திக்கவும் முடியாது, பிடிக்கவும் முடியாது. அதற்கு போலீசும் உதவி செய்யும்.
இனிமேல் எல்லாம் அவன் செயல் {போலிஸ்]
முன்கூட்டியே தீர்ப்பு தெரிந்து விட்டதோ? இந்நேரம் வெளிநாட்டுக்கு பறந்திருப்பார்களே இருவரும்? வேல் முருகனை கேளுங்கள் நீதிமன்றத்தில் எப்படி நீதியை நிலைநாட்டுவது என்று. பாடுவார் இன்னொரு புராணத்தை?
எதிர் பார்த்ததுதான்,எல்லாம் வல்ல ஆண்டவன் பதில் அளிப்பார்.
ஆண்டவன் எந்த காலத்தில் நீதி மன்றத்தில் சாட்சி சொல்லி இருக்கிறான், தீர்ப்பு வழங்கி இருக்கிறான்?
மலேசிய நல்ல நாடு ,,கொலை செய்தால் விடுதலை ,,பேசாமல் தமிழர்கள் நாம் இந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் போயி வாழ்வதுதான் சரி
முதலில் இவ்வளவு நாட்கள் இவன் சிறையில் தான் இருந்தான் என்பதற்கே சாட்சி இல்லை. இப்பொழுது மாயமாய் போய்விட்டான் என்பதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை. இதுவரை இவங்களது முகம் எந்த பத்திரிக்கையிலோ அல்லது தொலைக்காட்சியிலோ காட்டப்பட்டது உண்டா? பட்சி ஏதோ சொல்கிறது?
நம் நாட்டின் நீதி முறையை பார்த்து மற்ற நாடுகள் சிரிக்கும் நமக்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் மிகவும் கேவலமான நாள் , தண்டனை அனுபவித்தவன் முகம் தெரியாத குட்றவாளி ,இது வரை . அப்படி என்றல் கொலையாளி ? போலிஸ் துறையை கோமாளி ஆக்கிய முக்கிய நபர் யார் ? எங்கே செல்கிறது எனது மலேசியா நாடு ( எனக்கு தெரிந்து முகத்தை காட்டாமல் தண்டனை அனுபவித்த{ கொலைக்கான } ஒருவன் உலகத்தில் வேறு எதும் நாட்டில் நடந்தது உண்டா தெரிந்தால் சொல்லுங்கள் தலை வெடித்து விடும் போல் இருக்கு அய்யா
இது எழுதாத தீர்ப்பு நல்ல திட்டம் மலேசியா உன்னால் முடியும்