‘ஒட்டுநர் தகவல் முறை’ உருவாக்கப்படும்

spadபொது தரைப் போக்குவரத்து ஆணையம் பொதுப் போக்குவரத்து வாகன  ஓட்டுநர்கள் பற்றிய பின்னணித் தகவல்களை வழங்கும் முறை ஒன்றை உருவாக்கி  வருகின்றது.

அதில் கிடைக்குமானால் அவர்களுடைய கிரிமினல் பதிவுகளும் இருக்கும் என  அந்த ஆணையத்தின் தலைவர் சையட் ஹமிட் அல்பார் கூறினார்.

ஆணையத்துக்குக் கொடுக்கப்படும் தகவல்கள் அடிப்படையில் அந்த ‘ஒட்டுநர்  தகவல் முறை’ இருக்கும் என்றும் அது முழுமை அடைந்ததும் பொதுப்  போக்குவரத்து நிறுவனங்களும் அவற்றின் வாடிக்கையாளர்களும் அதிலிருந்து  தகவலைப் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

“நாங்கள் முழுமையான சோதனையை நடத்துவதற்கு உதவியாக சாலைப்  போக்குவரத்துத் துறை, போலீஸ் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்க இயலும் என  நாங்கள் நம்புகிறோம்.”

“தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, தனியுரிமை ஆகிய விஷயங்களை நாங்கள்  கவனிக்க வேண்டியுள்ளது. என்றாலும் தொழில் நுட்ப நீதியில் அந்த முறை  தயாராகி விட்டது,” என சையட் ஹமிட் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம்  கூறினார்.

அடுத்த ஆண்டு முதல் கால் பகுதியில் இணையத்தின் வழி அந்த முறையைப்  பெற இயலும் என அவர் நம்புகிறார்.