1.4 மில்லியன் புதிய வங்காள தேசத் தொழிலாளர்கள் பற்றி பாஸ் கேள்வி எழுப்புகின்றது

Banglaஅடுத்த ஆண்டு மலேசியாவுக்கு கூடுதலாக 1.4 மில்லியன் வங்காள தேசத்  தொழிலாளர்கள் கொண்டு வரப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து பாஸ்  ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

அந்த வங்காள தேசத் தொழிலாளர்கள் பின்னர் குடிமக்களாகி விடுவர் என்றும்  அது அஞ்சுகின்றது.

அந்தத் தொழிலாளர்கள் எங்கு வேலைக்கு அமர்த்தப்படுவர் என்றும் அவர்கள்  வருவதால் குற்றச் செயல்கள் பெருகுமா என்றும் அது கேள்வி எழுப்பியுள்ளது.

bangla1ஏற்கனவே குடியேற்றத் தொழிலாளர்கள் எண்ணிக்கை கட்டுக்குள் அடங்காமல்  இருப்பதைப் பரிசீலிக்கும் போது குத்தகைக் காலம் முடிந்த பின்னர் அந்தத்  தொழிலாளர்கள் காணாமல் போக மாட்டார்கள் என்பதை அரசாங்கம் எப்படி  உறுதி செய்யப் போகிறது என பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துவான்  இப்ராஹிம் துவான் மான் வினவினார்.

அடுத்த ஆண்டு கூடுதலாக 1.4 மில்லியன் தொழிலாளர்கள் மலேசியாவுக்கு  கொண்டு வரப்படுவர் என உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி  வியாழக் கிழமை அறிவித்தார். அவர்களுக்கு சிறப்பு அடையாளக் கார்டுகள்  கொடுக்கப்படும் என்றும் அகமட் ஸாஹிட் தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஏற்கனவே அரை மில்லியன் வங்காள தேசத் தொழிலாளர்கள்  வேலை செய்வதாக கோலாலம்பூரில் உள்ள வங்காள தேசத் தூதரகம்  மதிப்பிட்டுள்ளது.