2008ம் ஆண்டு தொடக்கம் புதிய அரசியல் கட்சிகளை அமைப்பதற்குச் சமர்பிக்கப்பட்ட 30 விண்ணப்பங்களில் 20ஐ ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலகம் அங்கீகரித்துள்ளது.
அந்த புதிய அரசியல் கட்சிகளின் பட்டியலை அடுத்த வியாழக் கிழமை அது வெளியிடும் என அதன் தலைமை இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் கூறினார்.
“அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளை போலீசார் தீர ஆய்வு செய்துள்ளனர்,” என அவர் மேலும் சொன்னார்.
நீலாயில் நேற்று ஆர்ஒஎஸ் ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் அப்துல் ரஹ்மான் நிருபர்களிடம் பேசினார்.
பல்வேறு காரணங்களுக்காக 13 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாதது, அரசியல் கட்சிக்கான தகுதிகளை கொண்டிராதது ஆகியவை அந்தக் காரணங்களில் அடங்கும்.
அடுத்த பொது தேர்தல் இன்னும் குழப்படியாக தான் இருக்க போகிறது என்பது திண்ணம் .