ஜாஹிட்: கடுமையான சட்டங்களின்றி போலீஸ் பல்லில்லா புலி

1 zahidசில சட்டங்கள், இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்ஏ),  அவசரக் காலச் சட்டம் (இஓ) போன்றவை கடுமையானவைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, ஆனாலும் அவை  மலேசியாவுக்குத் தேவைதான் என்கிறார்.

மலேசியாவை நியூ யோர்குடன் ஒப்பிட்ட அவர், அங்கு 35 பேருக்கு ஒரு போலீஸ் அதிகாரியும் மூலை முடுக்கெல்லாம் CCTV கேமிராக்களும் உள்ளன என்றார்.

மலேசியாவில், 750 பேருக்கு ஒரு  போலீஸ் அதிகாரியும் குறைந்த எண்ணிக்கையில்தான் கேமிராக்களும் உள்ளன. “அதுவும் விலைகுறைவான கேமிராக்கள், அதனால்தான் பெரும்பாலும் அவை வேலை செய்வதில்லை.

“இதுதான் நிலைமை…….எனவே, கடுமையானவை என்று கூறப்படும் அச்சட்டங்களின்றி போலீசின்  செயல்திறன் குறைவாகத்தான் இருக்கும்”, என்றார்.