அமைச்சரவையிலிருந்து விலகி அரசு சாரா அமைப்புக்குச் செல்லுங்கள் என வேதமூர்த்திக்கு அறிவுரை

Zahidபிரதமர் துறை துணை அமைச்சர் பி வேதமூர்த்தி அமைச்சரவையிலிருந்து விலகிக்  கொண்டு தமது அரசு சாரா அமைப்புப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்  என உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி மேலோட்டமாக  சாடியிருக்கிறார்.

“நீங்கள் போலீசாரைப் பற்றி குறை சொல்ல விரும்பினால்; போலீசார் பற்றி  எதிர்மறையான கருத்துக்களைச் சொல்ல விரும்பினால் தயவு செய்து விலகிக்  கொள்ளுங்கள். உங்கள் சொந்த அரசு சாரா அமைப்பை வழி நடத்துங்கள். அரசு  சாரா அமைப்புத் தலைவராக இருந்து கொள்ளுங்கள்.”

“இந்த விவகாரத்தில் நம்மில் யாரும் கிரிமினல்களுக்கு அனுதாபம் காட்டக்  கூடாது,” என அவர் குற்றத்தடுப்பு மீது பெட்டாலிங் ஜெயாவில் நடத்தப்படும்  கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

“அந்தத் தலைவர் அரசு சாரா அமைப்பு ஒன்றை வழி நடத்தினார். நிர்வாகத்தில்  இப்போது ஒர் உறுப்பினராக மாறியிருக்கிறார், அவர் ஏற்கனவே குறை  கூறியிருக்கிறார்” என அவர் யாரையும் பெயர் குறிப்பிடாமல் சொன்னார்.

அவர் வேதமூர்த்தியைத் தான் குறிப்பிடுகிறாரா எனப் பின்னர் நிருபர்கள் வினவிய  போது “Faham-fahamlah,” (புரிந்து கொள்ளுங்கள்) என அகமட் ஸாஹிட் பதில்  அளித்தார்.