‘புதிய கார் தயாரிப்பாளர்களை அனுமதிப்பது விலைகளை குறைத்து விடும்’

carsமலேசியச் சந்தைக்குள் புதிய கார் தயாரிப்பாளர்களை அனுமதிக்க தேசிய வாகனக்  கொள்கையை (NAP) அரசாங்கம் அமலாக்கினால் கார் விலைகள் குறைந்து விடும்  என தேசிய வாகனக் கழகம் (MAI) சொல்கிறது.

“இப்போது 1.8 சிசி-க்கு மேற்பட்ட கார்களைத் தயாரிக்கின்ற கார்
தயாரிப்பளர்களுக்கு மட்டுமே அரசாங்கம் அனுமதி வழங்குகின்றது. அத்துடன்  அவற்றின் விலை 150,000 ரிங்கிட்டுக்கு மேல் இருக்க வேண்டும்.”

“ஆனால் புதிய கொள்கை அதனை மாற்றி விடும். மலேசியாவுக்கு யார்
வேண்டுமானாலும் வந்து எந்த வகைக் கார்களியும் தயாரிக்க முடியும்.
எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வாகனங்களைத் தயாரிக்க வேண்டும்  என்பதே அவருக்கு விதிக்கப்படும் ஒரே நிபந்தனை ஆகும்.”

இவ்வாறு தேசிய வாகனக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மடானி சாஹாரி  ஏழாவது மலேசிய மாணவர் தலைவர் உச்சநிலைக் கூட்டத்தில் கூறினார்.

இந்த நாட்டில் கார் தயாரிப்பாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது போட்டி  கூடும். அதனால் இயல்பாகவே கார் விலைகள் குறைந்து விடும் என்றார் அவர்.

கலால் வரிகளை குறைக்காமல் ‘சந்தைச் சக்திகள்’ மூலம் கார் விலைகளைக்  குறைக்க எண்ணம் கொண்டுள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

 

TAGS: