ஜைட்: கட்டாயமாக கொடிகளை பறக்க விட வேண்டும் என்பது ‘கிறுக்குத்தனமானது’

zaidமெர்தேக்கா மாதத்தின் போது மலேசியக் கொடிகளை பறக்க விடுவதைக்  கட்டாயமாக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற யோசனையை  ‘கிறுக்குத்தனமானது’ என முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராஹிம்  வருணித்துள்ளார்.

அந்த யோசனையை முன் வைத்துள்ள தமது முன்னாள் சகாவான தொடர்பு,  பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக், நாட்டுப் பற்றி என்னும் விஷயத்துக்கு  அரசியல் சாயம் பூசுவதாக ஜைட் மேலும் சொன்னார்.

“1970-களில் அமெரிக்காவில் ஒவ்வொருவரும் வியட்னாம் போரை எதிர்த்தனர்.  தங்கள் சொந்தக் கொடியையும் அதிபருடைய படத்தையும் கூட எரித்தனர்.”zaid1

இங்கு மக்கள் விசுவாசமாகத் தான் இருக்கிறார்கள். நாட்டுப் பற்றுக்கு அரசியல்  சாயம் பூசப்படுவதால் ஒரு பிரிவுக்கு விசுவாசம் இல்லை எனக் கூறப்படுகின்றது,”  என்றார் அவர்.

கொடிகளைப் பறக்க விடுவதால் மட்டும் ஒருவரை நாட்டுப் பற்றுடையவராக  மாற்றி விட முடியும் என்றால் அரசாங்கம் வெகு காலத்திற்கு முன்பே அதனைச்  செய்திருக்கும்,” என ஜைட் ஏழாவது ஆண்டு மலேசிய மாணவர் தலைவர்கள்  உச்ச நிலைக் கூட்டத்தில் சொன்னார்.