பினாங்கு டிஏபி தலைவர்கள், எதிர்வரும் மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலில் கட்சித் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கைத் தோற்கடிக்க ஓர் இயக்கம் உருவாகி வருவதாகக் கூறப்படுவதை மறுக்கின்றனர்.
பினாங்கிலோ அதற்கு வெளியிலோ அப்படிப்பட்ட இயக்கம் கிடையாது என்பதை வலியுறுத்திய மாநில டிஏபி தலைவர் செள கொன் இயோ, கட்சித் தேர்தலில் தாம் லிம்மை எதிர்க்கப்போவதாகக் கூட செய்திகள் வருவதாகக் கூறினார்.
“இச்செய்திகள் கட்சியைப் பிளவுபடுத்துவதையும் தப்பான எண்ணத்தைத் தோற்றுவிப்பதையும் நோக்கமாகக் கொண்டவை.
“இது தேர்தல் ஆண்டு என்பதால் இப்படிப்பட்ட செய்திகளை நிறைய எதிர்பார்க்கலாம்”, என்றாரவர்.
நம் நாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட அரசியல். லிம் குவான் எங், இரண்டு தவணைகள் முதலமைச்சராக இருந்துவிட்டார். போதும். அடுத்தவருக்கு வாய்ப்புப் தர பெரும்பாலான கட்சிக்காரர்கள் விரும்புகின்றனர். நல்ல வழிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். இந்த விஷயம் ஏன் வேறு விதமாக திரிக்கப் படுகிறது.? DAP ம.இ.கா.வோ அம்நோவோ அல்ல. ஒருவரே பல காலங்களுக்கு இந்துவிட.
லிம் குவான் எங்கை எதிர்த்து சௌ கொண் எயு கட்சி தேர்தலில் நிற்கப் போவாதாக செய்தியா? சிரிப்புத்தான் வருகிறது. ஜ.சே.க.வில் சில கோட்பாடுகளுக்கு உட்பட்டு அங்கத்தினர்கள் யாராய் இருந்தாலும் மத்திய செயலவை தேர்தலுக்கு நிற்கலாம். இதில் கூடுதலாக வாக்குகள் பெரும் 20 பேர் மட்டும் தேர்வு செய்யப் படுவர். அந்த 20 பேரும் [மேற்கொண்டு 10 பேர் நியமனம்] தங்களுக்குள்ளாகவே ,யார் யார் எந்த எந்த பொறுப்புகள் வகிக்கலாம் என தேர்வு செய்துக் கொள்வர். ஆகவே, எந்தப் பொறுப்புக்கும் ஒருவர், மற்றொருவரை எதிர்த்து போட்டி போடும் அவசியம் கட்சியின் [Party constitution ] சட்டதிட்டங்களில் கிடையாது.
இருபத்திரண்டு வருஷம் பதவியில் இருந்து நாட்டையே சூறையாடிவிட்டு போனானே அவனைவிட எங்கள் முதல் அமைச்சர் எவ்வளவோ மேல்.. பதவிக்கு வந்து முதல் ஐந்து ஆண்டிலேயே மாநில பொருளாதரத்தை உயர்த்தி காட்டியவர் . திறமை உள்ளவர்கள் மக்கள் விரும்பும்வரை சேவை புரியலாம்.
பினாங்கில் சட்டமன்ற தேர்தலின் நிற்க ஒரு இந்தியனுக்கும் தகுதி இல்லை என்று சொன்னானே கோ சூ கூன், அவனை விட எத்தனையோ மடங்கு நல்லவர் லிம்..