அரசின் சிவப்பு நாடாவால் கோயில்களில் அர்ச்சகர் பற்றாக்குறை

templeவெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து மலேசிய ஆலயங்களில் பணிபுரிய வரும்  அர்ச்சகர்களுக்கு விசா கொடுப்பதில் கடுமையான கெடிபிடி கடைப்பிடிக்கப்படுவதாக கோயில் நிர்வாகக் குழுக்கள் அதிருப்தி கொண்டுள்ளன..

அரசாங்கத்தின் சிவப்புநாடா நடைமுறையின் காரணமாக ஆலயங்களுக்கு அர்ச்சகர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதென மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷண் மலேசியாகினியிடம் கூறினார்.

“இந்து அர்ச்சகர்கள் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வேலை செய்வதற்கான விசா கொடுக்கப்படும்.  இல்லையென்றால் சாதாரண விசாதான்.  அதை மாதா மாதம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்”, என்றார்.

மனிதவள அமைச்சுத்தான் பயிற்சியை நடத்தும்.  ஆனால், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இதுவரை பயிற்சியைத் தொடங்கக் காணோம்.   அதனால் ஆலயங்கள் அர்ச்சகர்கள் இன்றி சிரமப்படுகின்றன என்றாரவர்.

மற்ற சமயங்களுக்கு இப்பிரச்னை இல்லை.