பிகேஆர்: போலீஸ் சொல்வது உண்மை என்றால் அது இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட தேசியப் பிரச்னை

pkr logoமக்கள் தொகையில் ஏழு விழுக்காடாக இருக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குண்டர் கும்பல் உறுப்பினர்களில் 71 விழுக்காட்டினர் எனப் போலீசார் சொல்வது  உண்மையானால் அது இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட தேசியப் பிரச்னை என  பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் சொல்கிறார்.

“அந்தத் தகவல் உண்மை என்றால் ஏன் பொது மக்களுக்கு ஏற்கனவே
தெரிவிக்கப்படவில்லை,” என்றும் அவர் வினவினார்.

சந்தேகத்துக்குரிய 40,000 குண்டர் கும்பல் உறுப்பினர்களில் 71 விழுக்காட்டினர்  இந்தியர்கள் என நேற்று போலீஸ் அறிவித்துள்ளது குறித்து வெளியிட்டுள்ள  அறிக்கையில் சுரேந்திரன் அவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த எண்ணிக்கையில் 23 விழுக்காட்டினர் சீனர்கள் என்றும் 5 விழுக்காட்டுக்கும்  குறைவானவர்கள் மலாய்க்காரர்கள் என்றும் அந்த புள்ளி விவரத்தை தந்த தேசிய  குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹாடி ஹோ அப்துல்லா சொன்னார்.