கோலாலம்பூரில் உள்ள ஜாலான் அலோர்-ரை அனைத்துலகத் தரத்திலான சீன உணவு மய்யமாக மாற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) யோசனையை உத்துசான் மலேசியா சாடியுள்ளது.
2 மில்லியன் ரிங்கிட் செலவிலான அந்த யோசனை ஒர் இனத்துக்கு மட்டுமே நன்மை அளிக்கும் என அந்த ஏடு தனது ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியா தலையங்கத்தின் வழி கூறியது.
“எல்லா இனங்களையும் கொண்ட ஒர் உணவு மய்யத்தை ஏன் ஏற்படுத்தக் கூடாது ? கோலாலம்பூர் ஒர் இனத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல.”
அத்தகைய கோட்பாட்டைக் கோலாலம்பூரில் நடைமுறைப்படுத்த டிபிகேஎல் விரும்பினால் முதலில் அது மலாய் உணவு மய்யத்தை உருவாக்க வேண்டும்,” என அந்தத் தலையங்கம் வலியுறுத்தியது.
மலாய்க்காரர்களையும் பூமிபுத்ராக்களையும் அதிகமாகக் கொண்ட பல இன நாடு என்றும் அதனால் அரசு சாரா அமைப்புகள் சீன உணவு மய்யத்தை ஏற்படுத்தும் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்றும் ஆசிரியர் அவாங் செலாமாட் எழுதியுள்ளார்.
உத்துசானின் உயர் நிலை ஆசிரியர்களுக்கான புனை பெயர் அவாங் செலாமாட் என நம்பப்படுகின்றது.
ஜாலான் அலோர் உணவு மையம் மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது ! அங்கே மாட்டை விட்டு ,பன்றியை துரத்தும் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன் ! சுற்று பயனிகளின் உணவு மையாமாகவும் இருக்கிறது ! மஸ்ஜித் இந்தியா பக்கம் போய் பாருங்கள் ,மலாய்காரன் சிறு சந்து கிடைத்தாலும் கடையை போட்டு நாறடித்து விட்டான் ,DBKL என்ன செய்கிறது ?
உத்துசான் கூறுவதுபோல மூன்று இனங்களுக்கும் அந்த உணவுமையம் கொடுக்கப்படவேண்டும்.ஆனால்,ஒரு நிபந்தனை!மலாய்க்காரர்கள் அங்கு மாட்டிறைச்சியை பயன்படுத்தினால்,சீனர்களும் அங்கு பன்றி இறைச்சியை பயன் படுத்த அனுமதியளிக்கவேண்டும்;அதுதான் நியாயம்,நீதியும்கூட.